நேற்றைய தினம் விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி அது ட்ரெண்டாகி வரும் நிலையில், அதன் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரு படங்களும் ஒரேநாளில் தியேட்டரில் ரிலீஸாக உள்ளன. அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு தேதி நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வாரிசு படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித், ஹெச் வினோத் 3-வது முறையாக இணைந்துள்ளப் படம் ‘துணிவு’. இந்தப் படத்தை போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர், கடந்த 31-ம் தேதி வெளியான வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘துணிவு’ படம் வெளியாக உள்ளதாக போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றி மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
#Thunivu to screen in Theatres across the world on January 11, 2023. #ThunivuPongal #ThunivuFromJan11 #ThunivuPongal#Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies_ @kalaignartv_off @netflixindia @sureshchandraa #RomeoPictures pic.twitter.com/MzNw7eJJaP
— Boney Kapoor (@BoneyKapoor) January 4, 2023
முன்னதாக நேற்று விஜய்யின் ‘வாரிசு’ தமிழ் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டு, ஒரு மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி சாதனை படைத்தது. ட்ரைலரில் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சொல்லப்படாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஜனவரி 11-ம் தேதி படம் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.
January 11th @actorvijay
— Dil Raju (@DilRajuOfficial) January 4, 2023
வீரம் – ஜில்லா படங்களுக்குப் பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு, விஜய் அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் இரு படங்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஏன் பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்பு ரிலீஸ்?
பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி சனிக்கிழமை போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது. 15ம் தேதி சூரியன் பொங்கல், 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என நான்கு நாட்கள் செவ்வாய்க்கிழமை வரை பண்டிகை நாட்கள்தான்.
வழக்கமாக திரைப்படங்கள் வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ் ஆகும். 14ம் தேதி பொங்கல் தொடங்குகிறது என்றால் 13ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்திருக்கலாம். சமீப காலமாக படங்கள் வியாழக்கிழமைகளிலும் வெளியாகிறது. அதுபோல் செய்திருக்கலாம். ஆனால், வாரிசு – துணிவு படக்குழுவினர் 3 நாட்களுக்கு முன்பாக ஜனவரி 11 ஆம் தேதி புதன்கிழமையே ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். அப்படி ஜனவரி 11 ஆம்தேதி படங்கள் ரிலீஸ் ஆனால், பண்டிகை நாட்களோடு சேர்த்து 7 நாட்களை படக்குழுவினர் மனதில் வைத்து இதனை செய்திருக்கலாம்.
திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் எப்படி இருக்கிறது என்பது தெரிந்துவிடும். ஒரு வேளை படம் சுமாராக இருந்தாலோ, ஏன் நல்லாவே இல்லை என்றாலும் பண்டிகை நாட்களில் வேறு வழியில்லை திரையரங்கிற்கு மக்கள் கூட்டம் கூடி விடும் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்கள் முன்கூட்டியே ரிலீஸ் செய்கிறார்கள். பண்டிகை நாட்களில் திரையரங்குகளுக்கு குடும்பங்களுடன் படையெடுப்பது நம்முடைய கலாச்சாரம் தானே. ஒருவேளை படம் நன்றாக இருக்கும்பட்சத்தில் ஒரு வாரத்திற்கு மேல் வசூலை அள்ளி குவிக்க வாய்ப்பு இருக்கிறது.
எப்படியோ இரண்டு படங்களுமே ஒரு படமாக நல்ல கதை அம்சத்துடன் நல்ல திரைக்கதையுடன் எடுக்கப்பட்டு ஆடியன்ஸ்களுக்கு விருந்து படைத்தால் வரவேற்க தக்கதே. பொருத்திருந்து பார்க்கலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours