விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். முதல் முறையாக விஜய் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ரசிகர்களின் ஆவரவாரங்களுக்கிடையே, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின் தொகுப்பும், தனியார் சேனலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரைலரிலரிலேயே படத்தின் கதையை ஓரளவுக்கு நம்மால் கணிக்க முடிகிறது. குடும்பத்தில் 3 அண்ணன் தம்பிகள் உள்ளனர். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கடைசிப் பையனாக விஜய் இருக்கின்றனர். இவர்களில் விஜய்க்கும் பிரகாஷ்ராஜூக்குமான மோதல்களே கதைக்களமாக இருப்பது போன்று உள்ளது.
சரத்குமார் விஜய்யின் தந்தையாகவும், ஜெயசுதா விஜய்யின் தாயாகவும் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமெண்ட், காதல், பாசம் ஆகியவற்றுடன் கலவையான பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. விஜய்யுடன், யோகி பாபு சேர்ந்து ‘பூவே உனக்காக’ படத்தின் சீரியஸ் காட்சிகளை நகைச்சுவையாக செய்துள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ட்ரெலர். வெளியாகி 20 நிமிடங்களில் சுமார் 20 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது ட்ரைலர்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours