நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று கூறியதைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் யூடியூபர் பிஸ்மியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய், மற்றும் அஜித் ஆகியோரது திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றன. துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸும், வாரிசு திரைப்படத்தையும் ரெட் ஜெயண்ட் மற்றும் மற்ற விநியோக நிறுவனங்களும் விநியோகம் செய்கின்றன. தெலுங்கில் தயாரிப்பாளர் தில் ராஜுவே நேரடியாக விநியோகம் செய்கின்றார். முன்னதாக வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களுக்கு சரிக்கு சமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், விஜய்க்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று தயாரிப்பாளர் தில்ராஜு கூறியிருந்தார். தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் ஃபேமஸ். அதனால் வாரிசு திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டும் என்று கூறியதோடு, அதிக தியேட்டர்கள் கேட்டு உதயநிதியை சந்திக்க இருப்பதாக தில் ராஜு கூறியிருந்தார்.
பின்னர், சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளின் விநியோக உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் பெற்றது. இந்த நிலையில், இது தொடர்பாக பேசியிருந்த திரைத்துறை பத்திரிகையாளர் பிஸ்மி, விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார்; ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை மக்கள் விஜயை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அஜித் விஜய் ரசிகர்கள் மோதல் என்ற நிலை மாறி, விஜய் ரஜினி ரசிகர்கள் மோதல் என்ற நிலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியது.
சற்றுமுன்!
வலைப்பேச்சி! பிஸ்மி !ஆபிசில்! ஏன்டா! நாதாரிபயலே! ரஜினி ரசிகர்கள்! -ன்னா! சும்மா-வா?@valaipechu Mama Dowser Avunthuchu pic.twitter.com/HQw1mmNGY9
— Babu❤️Priyan (@BabuPriyan1) January 1, 2023
பிஸ்மியின் இந்த கருத்தால் வெகுண்டெழுந்த ரஜினி ரசிகர்கள் சிலர், பிஸ்மியின் வலைப்பேச்சு அலுவலகத்திற்குச் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. “விஜயை உயர்த்தியும் தலைவரை தாழ்த்தியும் பேசுகிறீர்கள். ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று சொன்னதை ஊடகத்திலேயே வாபஸ் வாங்க வேண்டும்” என்று பிஸ்மியிடம் வலியுறுத்தினர். திடீரென ஒரு ரசிகர் பிஸ்மியை ஒருமையில் பேச, கடுப்பான பிஸ்மி மரியாதையா பேசுறதா இருந்தா பேசுங்க. இல்லனா ஆபிஸவிட்டு வெளியே போங்க என்று கூறினார். ரஜினி ரசிகர்கள், பிஸ்மியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
+ There are no comments
Add yours