பிரபல தமிழ் பட இயக்குனர் செல்வ ராகவனின் இயக்கத்தில் 18 வருடங்களுக்கு முன்னர் வெளியான படம், 7ஜி ரெயின்போ காலணி. இப்படத்தில், ரவி கிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். ரசிகர்களின் மனதில் இன்றளவும் இடம்பிடித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

7 ஜி ரெயின்போ காலணி:

கதிர்-அனிதாவின் சோகமான காதல் கதைதான் 7ஜி ரெயின்போ காலணி. இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டது. தெலுங்கில் 7ஜி பிருந்தாவன் காலணி என இப்படத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது. காதலைப்பிடிக்கதவர்களுக்குக் கூட காதல் வரவழைத்த படம்தான், 7ஜி ரெயின்போ காலனி. யுவன் இசையில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பினை அல்ல, தனது இசைக்காக பல விருதுகளையும் குவித்தார் யுவன். 7ஜி ரெயின்போ காலணியின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னமின் மகன் ரவிகிருஷ்னா, இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவர், சமீப காலங்களில் எந்த மொழி படங்களிலும் நடிப்பதில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் 7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அப்படத்தின் இயக்குனர் செல்வராகவனிடமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read|Thunivu Trailer: பீஸ்ட் படத்தின் 2 ஆம் பாகமா “துணிவு”.. அஜித்துக்கு என்னாச்சு? – கழுவி ஊற்றும் இணையவாசிகள்!

ரசிகர்கள் வரவேற்பு:

சோகமான கதையாக இருந்தாலும், தமிழ் ரசிகர்களின் க்ளாசிக் லவ் ஸ்டோரி லிஸ்டில் 7 ஜி ரெயின்போ காலணி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்தியையடுத்து கதையில், காதலியை இழந்த கதிர் கரை சேர்ந்தானா இல்லையா? அவனது வாழ்க்கை என்ன ஆனது போன்ற கேள்விகள் ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது. ”ஏதேதோ படங்களுக்கு இரண்டாம் பாகம் வருகிறது, இந்த படத்திற்கு வரக்கூடாதா” என்பது போன்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

யார் யார் நடிக்க வாய்ப்பு?

படத்தின் ஹீரோ ரவிகிருஷ்னா, பல ஆண்டுகளாக படங்களின் பக்கம் தலை காட்டவேயில்லை. 7ஜி ரெயின்போ காலணி படத்திற்காக பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கிய இவர், சில ஆண்டுகளுக்கு பிறகு அப்ஸ்காண்ட் ஆகிவிட்டார். இவர் இலியானா தம்மன்னாவுடன் இணைந்து நடித்த படமான கேடி, வருந்தத்தக்க தோல்வியைத் தழுவியது. நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த சுக்ரன் படமும் பெரிதாக பேசப்படவில்லை. தெலுங்கு படங்களும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால், 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இவர் நடிப்பாரா என்பது சந்தேகம்தான். சோனியா அகர்வாலிற்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுப்பார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவருடைய அனிதா கதாப்பாத்திரமே 7ஜி ரெயின்போ காலணி படத்தில் இறந்து விட்டது. கதிரின் நண்பராக வந்த சுமன் ஷெட்டி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இதனால், அந்த படத்தின் கதையே தொடருமா..அல்லது புதிதாக ஒரு கதையை கொடுத்து விட்டு இதுதான் 7 ஜி காலனியின் இரண்டாம் பாகம் என்பார்களா என்பது தெரியவில்லை.

+ There are no comments
Add yours