இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ சாதனையை முறியடித்த ‘அவதார் 2’ | Avatar The Way of Water beat Avengers Endgame box office collection in india

Estimated read time 1 min read

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் வசூல் சாதனையை இந்தியாவில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் முறியடித்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் ‘அவதார்’. இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகுக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம். ரூ.1000 கோடி செலவில் உருவான இப்படம் உலகம் முழுவதும் ரூ.280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்தது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிச.16-ல் வெளியானது. முதல் பாகத்தைப் போல மிகச் சிறப்பான காட்சி அனுபவத்துடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் வெளியாகி 3 நாட்களில் இந்திய அளவில் ரூ.160 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், உலகம் முழுவதும் ரூ.3,500 கோடியை வசூலித்து மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. 10 நாட்கள் ஆன நிலையில், இந்திய அளவில் மட்டும் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம், உலகம் முழுவதும் ரூ.7 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், படம் தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.362 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் ரூ.10,000 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு அந்தோனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் இந்தியாவில் ரூ.360 கோடியை வசூலித்து ஹாலிவுட் பட வரிசையில் முதலிடம் பிடித்திருந்தது. தற்போது அதனை ‘அவதார் தி வே ஆஃப் வாட்டர்’ முறியடித்துள்ளது. விரைவில் படம் ரூ.400 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் உருவான இப்படம், அதன் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours