நடிகர் சித்தார்த் சமூக வலைதள பக்கங்களில் தனக்கு தோன்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை துணிச்சலோடு பதிவிடுவார். அடிக்கடி இவரது சமூக வலைதள பதிவுகள் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது. சித்தார்த் தனது பெற்றோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் இவர்களை ஹிந்தியில் பேச வற்புறுத்தியும், இதற்கு மறுத்ததால் கூட்டமே இல்லாத விமான நிலவியது சித்தார்த் மற்றும் அவரது பெற்றோர்களை காக்க வைத்து கடுமையாகவும் நடந்து கொண்டுள்ளனர்.
இதனை சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “காலியான மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். வயதில் முதிர்ந்த என்னுடைய பெற்றோர்களின் பையிலிருந்த நாணயங்களை அகற்றுமாறு அவர்கள் வற்புறுத்தினார்கள். நாங்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேசும்படி வேண்டினோம், இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியிலேயே தான் பேசிக்கொண்டிருந்தனர்.
தங்களையும் ஹிந்தியில் பேச சொன்னதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம், அதற்காக அவர்கள் எங்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்கள். இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார்கள், வேலையில்லாதவர்கள் தான் அதிகாரம் காட்டுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக
திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென @aaimduairport கோரியுள்ளேன்.#Siddharth #Actor #Tamil #StopHindiImposition pic.twitter.com/TjpUJRQBgd— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 28, 2022
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்துகொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென கோரியுள்ளேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மதுரை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், மொழி பிரச்னையை தூண்டும் வகையில் சித்தார்த்தின் சமூக வளைதளப் பதிவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அண்ணாமலை தலைமையில் பெண்கள் படும் பாடு – போர்க்கொடி தூக்கும் காய்த்ரி ரகுராம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours