ஹன்சிகா, ஆலியா பட், நயன்தாரா என 2022-ல் திருமணம் செய்துகொண்ட திரைப்பிரபலங்கள் பற்றிய ஒரு ரீவைண்டு தான் இது.
மெளனி ராய் – சூரஜ்: சன் டிவியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த டப்பிங் தொடர், நாகினி. இந்தத் தொடரில் கதாநாயகியாக நடித்த மெளனி ராய், கேரளாவைச் சேர்ந்த சுராஜ் என்பவரை ஜனவரி 27 அன்று கோவாவில் உள்ள ஹில்டன் கோவா ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
கரிஷ்மா தன்னா: நடிகை கரிஷ்மா தன்னா ரியல் எஸ்டேட் முதலீட்டாளரான வருண் பங்கேராவை பிப்ரவரி 5ம் தேதி மும்பையில் திருமணம் செய்துகொண்டனர்.
விக்ராந்த் மாஸ்ஸி-ஷீத்தல் தாக்கூர்: ‘Broken But Beautiful’ படப்பிடிப்பின்போது நெருக்கமாகப் பழகிவந்த பாலிவுட் நட்சத்திரங்களான விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் ஷீத்தல் தாக்கூர் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
ஷிபானி தண்டேகர்-ஃபர்ஹான் அக்தர்: பாடகர் மற்றும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளருமான ஷிபானி தண்டேகர், நடிகர் மற்றும் இயக்குநரான ஃபர்ஹான் அக்தரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா ஜாவேத் அக்தரின் மாளிகையில் நடைபெற்றது.
ரன்பீர் கபூர்-அலியா பட்: பாலிவுட் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் திருமணம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் நடைபெற்றது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்: தமிழ்த் திரையுலகின் கலர்புல் காதல் ஜோடியான நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜுன் 9ம் தேதி மகாபலிபுரத்திலுள்ள Sheraton Grand -ல் திருமணம் செய்துகொண்டனர்
பயல் ரோஹத்கி-சங்கராம் சிங்: பாலிவுட் நட்சத்திரமான பயல் ரோஹத்கி மற்றும் மல்யுத்த வீரர் சங்கராம் சிங் இருவரும் ஜூலை மாதம் ஆக்ராவில் திருமணம் செய்து கொண்டனர்.
ரிச்சா சதா-அலி பைசல்: ‘பக்ரி’ படத்தில் ரிச்சா சதாவுடன் நடித்த நடிகர் அலி பைசலும், ரிச்சா சதாவும் கடந்த அக்டோபர் 4 ம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தீப்பெட்டி போல வடிவமைக்கப்பட்டிருந்த அவர்களின் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகியிருந்தது.
ஆதி – நிக்கி: `நீ கவிதைகளா… கனவுகளா’ என படத்தில் காதலில் உருகி டூயட் பாடிய ஆதியும், நிக்கி கல்ராணியும் நிஜத்திலும் காதலித்து மே 18ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
ஹன்சிகா- சோஹைல் கதுரியா: மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோஹைல் கதுரியா, ஹன்சிகா மோத்வாணி இருவரும் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் முந்தோடா கோட்டையில் டிசம்பர் 4ம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்துகொண்டனர்.
‘தேவராட்டம்’ படத்தில் ஜோடியாக நடித்திருந்த கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் நவம்பர் 28ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர்.
+ There are no comments
Add yours