ஏப்.28-ல் ‘பொன்னியின் செல்வன் பாகம் 2′ ரிலீஸ் | ponniyin selvan 2 to be release on april 28 2023 lyca production house annnounced

Estimated read time 1 min read

சென்னை: எதிர்வரும் 2023, ஏப்ரல் 28-ம் தேதி அன்று பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு. இதனை அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அது குறித்து சில நொடிகள் மட்டுமே ஸ்ட்ரீம் ஆகும் வீடியோ ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 அன்று வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது.

முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல். முதல் பாகத்தை காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் முதலானவர்கள் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours