பாடகர் கே.கே என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் கிருஷ்ணகுமார் குன்னத். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி எனப் பல மொழிகளில் பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில் ‘மின்சாரக் கனவு’ படத்தில் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’, ‘மன்மதன்’ படத்தில் ‘காதல் வளர்த்தேன்’, ‘எம் குமரன் சன் அஃப் மகாலட்சுமி’ படத்தில் ‘நீயே நீயே’, ‘கில்லி’ படத்தில் ‘அப்படிப் போடு’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் ‘நினைத்து நினைத்து’ என இவர் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. தன் பாடல்களால் இந்தியா முழுவதும் ரசிகர்களை ஆட்கொண்டிருக்கும் கே.கே, கடந்த மே 31-ம் தேதி கொல்கத்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது பிரிவு அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
பொன்னியின் செல்வனும் வெற்றிமாறன் பற்ற வைத்த நெருப்பும்
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மக்களைக் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாய் திரையரங்குக்கு அழைத்து வந்தது இத்திரைப்படம். பாகம் ஒன்று நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. ஒருபுறம் இது வரவேற்பை பெற்று வரும் நிலையில் மற்றொருபுறம் படம் வருவதற்கு முன்னரே, வேறொரு விவாதத்தில் சோழர் வரலாறு தமிழ் வரலாறாகச் சென்று சேராமல் இந்து வரலாறு என்ற அடையாளத்துடன் மக்களிடம் சென்று சேர்கிறது. ராஜராஜ சோழன் இந்து அரசனாக அடையாளப்படுத்தப்படுகிறார், இது வரலாற்று திரிபு என்ற விமர்சனமும் எழுந்தது.
இந்த விமர்சனத் தீயைப் பற்ற வைத்த இயக்குநர் வெற்றிமாறன், “கலையை இன்று நாம் சரியாகக் கையாள வேண்டும். தவறினால், வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்” என்றார்.
வெற்றிமாறனின் இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை ஆதரித்தப் பேசியிருந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருள்மொழி சோழனின் உண்மையான வரலாற்றையும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வே.பிரபாகரனின் வரலாற்றையும் கலைவடிவமாக தான் தயாரிக்கவுள்ளதாகவும் இயக்குநர் வெற்றிமாறன் அதை இயக்குவார் என்றும் அறிவித்திருந்தார்.
+ There are no comments
Add yours