Actor Prabhas Taken Rupees 21 Crore Loan From Bank | சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய பிரபாஸ் என்ன காரணம்

Estimated read time 1 min read

பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பெரும் பெயரையும், புகழையும் பெற்றவர் தான் நடிகர் பிரபாஸ்.  பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்திருந்தார்.  இதனையடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் அடுக்கடுக்காக குவிந்தது, மிகவும் பிஸியான நட்சத்திரமாக மாறிவிட்டார்.  இவர் தனது ஒரு படத்திற்கே சுமார் ரூ.150 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்கி வருகிறார், நடப்பாண்டின் படி இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் $27 மில்லியன் ஆகும்.  இந்நிலையில் நடிகர் பிரபாஸ் தனது சொத்தை பிணையமாக வைத்து வங்கியிலிருந்து சுமார் ரூ.21 கோடி கடன் தொகையை பெற்றிருப்பது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தொல்லை செய்யாதீர்கள்… தற்கொலை செய்துகொண்ட நடிகை – பாலிவுட்டில் பரபரப்பு

மிகப்பெரும் பொருட்செலவில் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் கோபிகிருஷ்ணா மூவிஸ் பேனர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது, அதேபோல ப்ரண்ட்ஸ் பேனர்ஸ் நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட்ட ‘சாஹோ’ படமும் பெரும் தோல்வியினை தழுவியது. பாகுபாலி மூலம் வெற்றிநாயகனாக ஜொலித்த இவருக்கு இந்த இரண்டு படங்களும் பெரிய தோல்வியை அள்ளிக்கொடுத்தது.  இரண்டு படங்களுமே தோல்வியை தழுவியதால் நடிகர் பிரபாஸ் தனது சம்பளத்தின் பெரும்பகுதியை திருப்பி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் புதன்கிழமையன்று பிராபாஸ் ரூ.21 கோடி கடனுக்கான காசோலையை வங்கியிலிருந்து பெற்றிருக்கிறார், இந்த செய்தி தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.  ஒரு படத்திற்கே ரூ.100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிய பிரபாஸ் எந்த காரணத்தினால் இப்போது ரூ.21 கோடி கடனை பெறுகிறார் என்று பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.  அதுமட்டுமில்லாது பிரபாஸ் ஒரு சாதாரண ஆள் இல்லை, தெலுங்கு திரையுலகில் அவர் ஒரு மிகப்பெரிய நடிகர், அப்படி இருக்கையில் அவர் ஏன் கடன் வாங்கியுள்ளார் என பலரும் யோசித்து வருகின்றனர்.  பிரபாஸ் புதிய தொழிலில் முதலீடு செய்வதற்காக தான் வங்கியிலிருந்து கடன் தொகையை பெற்றிருக்கிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | Varisu Audio Launch : செருப்புகளை வீசி எறிந்த ரசிகர்கள்… போலீசாருடன் தள்ளுமுள்ளு – வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours