‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், நடிகர் யாஷ்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய படங்கள் வட இந்தியாவிலும் நன்றாக ஓடுகிறது என்பதற்காக, இந்தி திரைத்துறையை, கர்நாடக ரசிகர்கள் குறைத்துப் பேச வேண்டாம். அதை விரும்பவில்லை. ஏனென்றால் இதே பிரச்சினையை நாங்களும் எதிர்கொண்டோம். அதிலிருந்து மீண்டு வர கடும் முயற்சிகளை மேற்கொண்டோம். அதனால், எந்த சினிமாதுறையையும் அவமதிக்க வேண்டாம். வடக்கு, தெற்கு என்பதைத் தாண்டி அனைவரையும் மதிக்க வேண்டும். பாலிவுட் பல்வேறு விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கிறது.
என் வாழ்வை மாற்றிய மந்திரம் எது என்று கேட்கிறார்கள். என் நம்பிக்கைதான் என் வாழ்வை மாற்றியது. வீடு அல்லது கார் வாங்குவது குறிக்கோள் அல்ல. அது அடிப்படைத் தேவை. அதைத் தாண்டி உங்களுக்கென்று உயர்ந்த இலக்கை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் அதுபோன்று யோசிக்க ஆரம்பித்தால், நாட்டிற்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். நான் என் நட்சத்திர அந்தஸ்துக்காக உழைக்கிறேன். நான் ஏற்கனவே சூப்பர் ஸ்டாராக இருந்தேன். மக்கள் என்னை ஏற்றுக் கொள்ள நேரம் எடுத்துக் கொண்டார்கள் இவ்வாறு யாஷ் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours