”1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார்”- ’வாரிசு’ விழாவில் விஜய் மாஸ் பேச்சு!

Estimated read time 2 min read

தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என்றும், ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும், அது தான் உங்களை உயர்த்தும், நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர் என்றும் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசியுள்ளார் நடிகர் விஜய்.

வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நடித்திருக்கும் நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

image

இந்நிலையில், இறுதியாக மேடைக்கு வந்து பேசினார் விஜய். அப்போது பேசுகையில், ”நம்ம போற பயணம் நிறைவா இருக்கணும் என்றால் நாம் போற பாதை சரியா இருக்கனும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி எனக்கு நிறைய அன்பு கொடுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டியது. இனிமே இது தான் என்று கூறி ரஞ்சிதமே பாடலில் வரும் முத்தம் ஸ்டைலில், ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்தார் விஜய்.

image

தயாரிப்பாளரை பார்த்து பேசிய அவர், வாரிசு படத்திற்கு வாழ்த்துகள் சார். நான் சொன்னது உங்களுடைய வாரிசுக்கு சார் என்று கூறினார். பிறகு வாரிசு 2 எப்போது சார். இப்போது கேட்டது படத்தை பற்றி கலகலப்பாக பேசினார்.

யோகி பாபு குறித்து பேசுகையில், யோகி பாபு ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விடணும் என்று இருந்தார். இப்போது யோகி பாபு வை ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என ஆசை படுகின்றனர். அந்த வளர்ச்சி சந்தோஷம்.

எஸ் ஜே சூர்யா வந்து விட்டீர்கள் இன்னும் கொஞ்ச காலம் தான். எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் நடித்தது குறைவு தான். அவருடைய கனவு கொஞ்ச தூரத்தில் தான் உள்ளது.

குட்டி கதை :

image

ஒரு குட்டி பசங்க கதை தான். உறவுகளை பற்றிய படம் என்பதால் உறவுகளை பற்றிய குட்டி கதை சொல்கிறேன். அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஆயுதம். அதில் ஒன்னு உறவுகள், மற்றொன்று நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும்.

இரத்த தானம் செயலியை நான் தொடங்க காரணம் இரத்தத்திற்கு மட்டும் தான் வேறுபாடு கிடையாது, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது, மதம் கிடையாது. மனிதர்கள் தான் பிரித்து பார்த்து பழகி விட்டோம். இரத்தத்திற்கு அந்த பேதம் கிடையாது. 6000 பேருக்கு மேல் அந்த செயலியில் இணைந்து உள்ளனர். பலர் இரத்த தானம் செய்துள்ளனர். இது எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்கு தான் சேரும். பிடித்து இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்.

கேள்வி பதில்:

image

தளபதிக்கு எது போதை? –

ரசிகர்கள் தான்.

30 வருட பயணம் வெற்றிக்கு பின்னால் இருக்கும் விஷயம், பிரச்சினைகள்?

பழகி போச்சு பிரச்னைகள் வருகிறது, எதிர்க்கிறார்கள் என்றால், அப்போ நாம் சரியான பாதையில் தான் போகிறோம். தேவையான விமர்சனமும் தேவையில்லாத எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும்.

1990 களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார். போக போக ஒரு சீரியசான போட்டியாளராக இருந்தார். அவரை தாண்ட வேண்டும் என நானும் போட்டி போட்டி ஓடினேன். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்க வேண்டும் என்ற போட்டியாளர் உங்களுக்குள் இருக்க வேண்டும். அது தான் உங்களை உயர்த்தும். நீங்கள் தான் உங்களுக்கான போட்டியாளர்.

பின்னர் ரசிகர்கள் உடன் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்து கொண்டார். எனக்கு டிவிட் பண்ண தெரியாது. நான் என்னுடைய அட்மின் அழைக்கிறேன். #என்நெஞ்சில்குடியிருக்கும்.

ரஞ்சிதமே பாடலை விஜய் பாட ரசிகர்களும் கூட பாடினார்கள்.

இதனிடையே, வாரிசு இசை வெளியிட்டு விழா மேடையில் இருந்து நடிகர் விஜய் எடுத்து வெளியிட்ட செல்பி வீடியோ ட்விட்டரில் ஒரு மணி நேரத்திற்குள்ளாகே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அதேபோல் லைக்ஸ்களும் ஒரு மில்லியனை கடந்து மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

<blockquote class=”twitter-tweet”><p lang=”qme” dir=”ltr”><a href=”https://twitter.com/hashtag/EnNenjilKudiyirukkum?src=hash&amp;ref_src=twsrc%5Etfw”>#EnNenjilKudiyirukkum</a> <a href=”https://t.co/4rbooR4XLa”>pic.twitter.com/4rbooR4XLa</a></p>&mdash; Vijay (@actorvijay) <a href=”https://twitter.com/actorvijay/status/1606697680717361152?ref_src=twsrc%5Etfw”>December 24, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

மற்ற பிரபலங்கள் பேசிய விவரம்:

image

ஜானி மாஸ்டர்:

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய டான்ஸ் மாஸ்டர் ஜானி, “நான் நிறைய ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளேன். என்னைப் பொறுத்தரையில் தெலுங்கில் பவன் கல்யாண் என்னுடைய பேவரெட். ஆனால் இப்போது விஜய் சார் என்னுடைய பேவரட் ஆக மாறியுள்ளார். எல்லா இளம் திறமையாளர்களையும் அவர் ஊக்குவிக்கிறார்” என்று பேசியுள்ளார்.

Rashmika Mandanna shares adorable photo with Thalapathy Vijay from 'Varisu'  sets | Regional-cinema News – India TV

ராஷ்மிகா மந்தனா:

விஜய் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, கில்லி படத்தின் முதல் நாள் முதல் ஷோவை எனது அப்பா உடன் பார்த்தேன். அதுலருந்து நான் விஜய் ஃபேன் ஆயிட்டேன். என்னுடைய ஃபேவரட் & க்ரஷ் விஜய் சார். வாரிசு பட பூஜையின் போது என்னுடைய ஹாட் பீட் எகிறியது. நான் நடுங்கிக் கொண்டிருந்தேன் என்று கூறினார்.

image

பிரகாஷ் ராஜ்:

படம் குறித்து பேசியிருக்கும் பிரகாஷ் ராஜ், வாரிசு முதல்கட்ட படப்பிடிப்பின் போது விஜய் சார் என்னிடம் வந்து ‘செல்லாம், இந்த கண்ண இவ்ளோ பக்கத்துல பாத்து எவ்ளோ நாள் ஆச்சு’ என்று சொன்னார். வாரிசு படத்தோட க்ளைமாக்ஸில் விஜய்யின் நடிப்பை பார்த்து நீங்க உணர்ச்சிவசப்படப் போறீங்க. வாரிசு படம் வாழ்க்கையைப் பற்றிய நேர்மறையான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும். இது தற்போதைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது என்று பேசியுள்ளார்.

image

சரத்குமார்:

மேலும் மேடையில் பேசிய சரத்குமார், விஜய் தான் எதிர்காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று சூர்ய வம்சம் படத்தின் 175 நாள் விழாவில் நான் சொன்னேன். தற்போது அது நடந்துவிட்டது. விஜய் தான் இப்போது சூப்பர் ஸ்டார். நான் அப்போது இதை சொன்ன போது கலைஞர் கூட ஆச்சர்யப்பட்டார் என்று கூறியுள்ளார்.

image

தயாரிப்பாளர் லலித்:

தொடர்ந்து 7 ஸ்க்ரீன் ஸ்டியோ தயாரிப்பாளர் லலித் பேசுகையில், திரையரங்கு திறக்கனும், என் ரசிகர்கள் தியேட்டர்ல படங்கள பாக்கனும் னு தளபதி பிடிவாதமா இருந்ததால ரிலீஸ் ஆனதுதான் மாஸ்டர் படம். ஓடிடியில் மாஸ்டர் படத்தை வெளியிட பெரிய ஆஃபர் கிடைத்தது. ஆனால், தியேட்டர்களுக்கு நாம்தான் ஆதரவு கொடுக்கணும் என்று விஜய் சொன்னார். விஜய் சாரின் சினிமா வாழ்க்கையிலேயே இதுவரை பார்த்திராத அளவிற்கு வாரிசு மிகப்பெரிய ரிலீஸ் ஆக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் தமன்:

வாரிசு படத்தில் இசையமைத்தது குறித்து பேசிய இசையமைப்பாளர் தமன், என் பையன் பத்தாவது படிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஸ்கூல் போகும்போது, நல்லா மியூசிக் போட்டு என் மானத்தைக் காப்பாத்திடுன்னு சொல்லிட்டே போவான். இயக்குநர் வம்சி மாட்டு வண்டிக்கு அலாய் வீலு போட்டு சுத்திருக்காரு. அதுதான் இந்த ‘வாரிசு’. என் 27 வருட காத்திருப்புதான் ‘வாரிசு’, சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு இன்றைக்குதான் வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது. நான்* வாங்கிய விருதுகளைவிட உங்களின் பாராட்டுகள்தான் எனக்கு பெருசு” என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours