பழனி ரயில் நிலையம் அருகே 58 கோடியில் போடப்பட்ட தார் சாலையில் மழைநீர் மற்றும் மழை நீருடன் சேர்ந்து வரும் கழிவுநீர் வடிய முறையான பாதை இல்லை. மற்றும் ரயில் நிலையம் அருகே அன்பு மருத்துவமனை பின்புறம் உள்ள ஏ.சி.சி சாலை உள்ள வீடுகளிலும், ரோடு களிலும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் வெள்ளம்போல் புகுந்தது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. முக்கியமாக பழனி நகராட்சி ஆணையர் குடியிருக்கும் அப்பர் தெருவிலும் மழை நீரும் கழிவு நீரும் வடிய வழியில்லாமல் கடல் போல் காட்சியளிக்கிறது. பழனி நகராட்சி ஆணையரும் மற்றும் அதிகாரிகளும் சுகாதார துறையினரும், உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என, குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகளும்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் அருகே உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் அவல நிலை கண்டுகொள்ளுமா பழனி நகராட்சி?
Estimated read time
0 min read
+ There are no comments
Add yours