திருவனந்தபுரம்:
சமூக வலைதளம் மூலம் நெருக்கமான இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்து பின்னர் ஆபாச படம் எடுத்து ரூ 5 கோடி பணம் கேட்டு மிரட்டிய அரசு டாக்டரை போலீசார் கைது செய்தனர். ேகரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் லத்தீப் முர்ஷித் (26). இவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவருக்கு முகநூல் மூலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களிலேயே இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். அந்த இளம்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறிய டாக்டர் லத்தீப் முர்ஷித், அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் டாக்டர் லத்தீப் முர்ஷித், அந்த ஆபாச போட்டோக்களை காண்பித்து மிரட்டி திருமணம் செய்ய வேண்டுமென்றால் ரூ 5 கோடி பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
இதில் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து தொடுபுழா போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொட்டாரக்கரையில் வைத்து டாக்டர் லத்தீப் முர்ஷித்தை கைது செய்தனர். விசாரணைக்கு பின் போலீசார் அவரை தொடுபுழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+ There are no comments
Add yours