பழைய கார் டயரை புது டயராக மாற்றி விற்கும் சென்னை கடைகள் – கவனமாக இருங்கள்

Estimated read time 0 min read

சென்னையின் பெரிய பல பிராண்டு கார்டயர் விற்பனை செய்யும் கடைக்கு காருக்கு பதிய டயர் மாட்ட சென்றேன் . பிரமாண்ட கடை மற்றும் வரவேற்பறை . டயரின் விலை கேட்டேன் . வெவ்வேறு பிராண்டு டயர்கள் மற்றும் விலைகளை கூறினார் அந்த விற்பனையாளர் . நான் பிரிஸ்ட்டோன் டயர் போட கூறினேன்.

டயரின் விலையில் 1000 ரூபாய் குறைவாக இருந்தது

காரின் டயர் மாற்றும்போதுதான் கவனித்தேன். டயரில் கம்பெனியின் ஸ்டிக்கர் ஏதுமில்லை . பணியாளரிடம் கேட்டேன் . இப்போது ஸ்டிக்கர் ஏதும் வருவதில்லை என்றார் . 20 நாட்களுக்கு முன்பு வாங்கிய ஸ்டெப்னியில் உள்ள புதிய டயரை காண்பித்தேன். அதில் ஸ்டிக்கர் அப்படியே ஒட்டப்பட்டிருந்தது . எங்கள் உரையாடலை கேட்ட மேனேஜர் விபரம் கேட்டு ஸ்டிக்கர் உள்ள டயர் போடக்கூறினார் .
ஆனால் அந்த ஸ்டிக்கரும் கம்பெனி ஸ்டிக்கர் இல்லை .
இந்த டயர் வேண்டாம் என்று கூறினேன்

ஓகே சார் என்று கூறிவிட்டு பழைய கழற்றிய டயரையே திரும்ப போடக்கூறினார்

வெளிநாடுகளில் இருந்து பழைய டயர்கள் இறக்குமதி செய்யப்படுகிறது

அவை பாலீஷ் செய்யப்பட்டு மறுவிற்பனை செய்யப்படுகிறதாம்

2000 ரூபாய்க்கு வாங்கி 17000 ரூபாய்வரைவாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படுகிறது

மறுமுறை உங்கள் காருக்கு டயர் வாங்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் . நீங்கள் வாங்கும் டயர் பாலீஸ் செய்யப்பட்ட பழைய டயராகக்கூட இருக்கலாம்

வட இந்தியாவில் இருந்து சென்னையில் டயர் ஷோரூம் திறந்து இப்படியும் தமிழ்நாட்டின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது

உஷார் உஷார் உஷார்

ஒரு காருக்கு பாலீஸ் டயர் விற்பனை செய்யும்போது சராசரியாக 40000 வரை லாபம் பார்க்கிறார்கள் . தினமும் 40 கார்கள் என்றால் 16 லட்சம் தினசரி லாபம்

இதுகூட பரவாயில்லை நிறைய சாலைவிபத்துக்களுக்கு இந்த பழைய டயர்கள் காரணமாக இருக்கின்றன

இனி நீங்கள் வாங்கும் டயர் உண்மையிலேயே புதிய டயர்தானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்

கடை ஓனர் வட இந்தியராக இந்திக்காரராக இருந்தால் இன்னும் எச்சரிக்கை தேவை . பழைய பாலீஷ் டயர்கள் டில்லியில் இருந்துதான் வருகிறது

டில்லியில் பழையடயர் என்றே விற்பனை செய்யப்படுகிறது

சமூகன் சரவணக்குமார் @ எஸ்கே மதுரை

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours