சேலம்:
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ரயில் பெட்டிகளை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது…
மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நெரிசலில் பயணம் செய்ய முடியாது என்பதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ரயில் பெட்டி இயக்கிட வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பயண சீட்டு வழங்க வேண்டும், ஆன்லைன் முன்பதிவு தொகையான அடையாளச் சான்று வாங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகளை அழைக்கக்கூடாது,
அனைத்து ரயில் நிலையங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு
பார்க்கிங் இடத்தை உருவாக்க வேண்டும் என இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும்,ரயில்வே துறையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அனுமதியின்றி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத்திறனாளிகளின் இந்த முற்றுகை போராட்டத்தால் ஜங்சன் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
+ There are no comments
Add yours