T20 : விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஸ்ரேயஸ் அய்யர்..!

Estimated read time 1 min read

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி தர்மசாலாவில் நேற்று நடந்த 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் உறுதியுடன் நின்று 73 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற உதவினார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் நடந்த முதல் இரு போட்டிகளிலும் இவர் அரைசதம் கடந்து இருந்தார். நேற்று நடந்த போட்டியில் ஆட்ட  நாயகன் விருது வென்ற இவர் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் தொடர்ச்சியாக 3 முறை அரைசதம் வீரர் என்ற சாதனையை விராட் கோலியுடன் பகிர்ந்து கொண்டார் ஸ்ரேயஸ் அய்யர். அதுமட்டுமின்றி  3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில்  ஸ்ரேயஸ் அய்யர் 204 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் விராட் கோலி 199 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours