நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் படைப்புகளை காட்சிப்படுத்த கற்றல் கற்பித்தல் உபகரண கண்காட்சியும், தன்னார்வலர்க்கான பயிற்சியும் நேற்று நடைபெற்றது.
வட்டார கல்வி அலுவலர் கோபால கிருஷ்ண மூர்த்தி, பாலசமுத்திரம் ஒன்றியத்தின் தலைமை ஆசிரியர் திருமதி செல்வி லட்சுமி அவர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள், ஆகியோர் இந்த குறுவள மைய அளவிலான இல்லம் தேடி கல்வி கற்றல் கற்பித்தல் உபகரணம் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களது படைப்புகளை ஆர்வத்துடன் வெளிப்படுத்திய படைப்புகளை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
+ There are no comments
Add yours