ஆற்காடு:
ஆற்காடு கோட்டம் சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள காரணத்தால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் ஆற்காடு கோட்டத்தின் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் மேற்பார்வை பொறியாளர் வேலூர் மின் பகிர்மான வட்டம் வேலூர் ராமலிங்கம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் விஜயகுமார் செயற்பொறியாளர் ஆற்காடு திருமதி கோ. தனலட்சுமி உதவி செயற்பொறியாளர் நகரம் ஆற்காடு சாந்தி பூஷன் உதவி செயற்பொறியாளர் திமிரி திருமதி. சித்ரா உதவி செயற் பொறியாளர் கலவை மெஹபு உசேன் உதவி செயற்பொறியாளர் மாம்பாக்கம் அவர்கள் மற்றும் ஆற்காடு கோட்டத்தில் உள்ள அனைத்து பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours