வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே,வி குப்பம், குடியாத்தம் பேரணாம்பட்டு, அணைக்கட்டு ஆகிய ஆறு தாலுக்கா உள்ளடக்கி உள்ளது. இந்த ஆறு தாலுகாக்களில் மிகவும் சிறப்புடன் மக்கள் மத்தியில் செயல்பட்டு வருவது காட்பாடி தாலுக்கா அலுவலகம் ஆகும்.
இந்த அலுவலகத்தினை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி மக்களுக்கு என அமைத்துக் கொடுத்தார். இதில் மனுக்களை கொடுப்பவர் பொதுமக்களிடம் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரர் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கனிவுடன் அரவணைப்புடனும் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கின்றனர்.
மேலும் பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் குறைகள் வந்தால் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் நேரில் சென்று உடனடியாக அந்த குறைகளை நிவர்த்தி செய்வதில் சிறந்தவராக விளங்கி வருகிறார். மேலும் வரும் பொது மக்களிடம் முகம் சுளிக்காமலும் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமலும் கனிவுடன் நடந்து கொள்கிறார் என அங்கு பணியாற்றி வரும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பெருமிதமாக கூறுகின்றனர்.
தனது பணியின் நேரம் முடிந்து விட்டது என்று செல்லாமல் காத்திருந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிவதில் இவருக்கு நிகர் இவரே, ஆனால் சில விஷமிகளோ இவரின் நற்பெயருக்கு அவதூறை ஏற்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து திரிகின்றனர். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப இவரின் அயராது பணியை எப்படிப்பட்ட சக்தியாலும் ஒழிக்க முடியாது என்பது உண்மையான ஒன்றாகும்.
-மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்
+ There are no comments
Add yours