குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

Estimated read time 1 min read

ராணிப்பேட்டை:

வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் டோல்கேட் தெருவை சேர்ந்த இளைஞர் கார்த்திக் -22 குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம் டோல்கேட் தெருவை சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் கார்த்திக் வயது-22 தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அமிர்தவல்லிக்கும் கடந்த 2020 ஆண்டு திருமணம் நடைபெற்றது

இந்த நிலையில் இருவருக்கும் சிறு சிறு குடும்ப பிரச்சனை காரணமாக கார்த்திக் அமிர்தவல்லிடம் அடிக்கடி சண்டையிட்ட வந்த நிலையில் அவர் அவரது அம்மா வீட்டிற்கு கிளம்பி உள்ளார் இதனை அடுத்து கார்த்திக் நேற்று முழுவதும் அதிக மதுபோதையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                        -RJ Suresh Kumar

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours