நீலகிரி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரி (வயது 35), இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்துக்கா காத்திருந்தார். அப்போது கார்த்திக்(38) என்பவரும் அங்கு வந்தார். பின்னர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த ஹரியை தன் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை கண்ட சகபயணிகள் பயத்தில் அலறி ஓடினர். பின்னர ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஊட்டியில் பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours