மும்பை:
மும்பையின் ஷேர்-இ-பஞ்சாப் காலனியில் தூங்கிக்கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மருமகளை கொலை செய்ததை 90 வயது முதியவர் ஒப்புக்கொண்டார்.
மனைவி மற்றும் மனநலம் குன்றிய மருமகளைக் கொன்றதை ஒப்புக்கொண்ட 90 வயது முதியவர் புருஷோத்தம் சிங் கைது செய்யப்பட்டதாக மேக்வாடி காவல் நிலைய ஆய்வாளர் சஞ்சீவ் பிம்பிள் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய சஞ்சீவ் பிம்பிள், “புருஷோத்தம் சிங்கை கைது செய்து 3 நாள் போலீஸ் காவலில் வைத்து, விசாரணை நடத்தியபோது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார், தான் இறந்த பிறகு மனைவி மற்றும் மருமகளுக்கு என்ன நடக்கும் என்ற கவலையில் அவர் கொலை செய்ததாக விசாரணையின்போது தெரிவித்தார்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours