கடந்த 29.01.22.அன்று தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் தஞ்சை மேற்கு காவல் நிலையம் இடம்பெற்றது அதில் தற்போது இருக்கும் சந்திரா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நம்முடைய அரசியல் டைம்ஸ் whatsapp.கார்டில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர்(1132) ரோஜாப்பூ என்பவர் நாம் வெளியிட்டிருந்த வாட்ஸ்அப்.கார்டில்.
நாம் வெளியிட்ட செய்தி
சந்திரா ஆய்வாளர் அவர்கள் படத்தை எடுத்துவிட்டு அதற்கு முன்பு 2020- ல் இருந்த ஆய்வாளர் செங்குட்டுவன் புகைப்படத்தை அதில் சேர்த்து மாஃபிங் செய்து அனைத்து குழுக்களுக்கும் பகிர்வு செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வெளிவர அந்த தலைமை காவலரை தொலைபேசியில். கேட்டதற்கு ஆமா சார் நான்தான் செய்தேன் எடிட் செய்து போட்டிருக்கிறேன். இப்போது என்ன ஆயிற்று இதை நீங்கள் யார் சொல்லி கேட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் நான் உங்களை அலுவலத்தில் வந்து பார்க்கிறேன்.
காவலர் ரோஜாப்பூ வெளியிட்ட செய்தி
என்று திமிராகவே பேசினார். நாங்களும் சரி என்று தொடர்பை துண்டித்து விட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்ய அவர் உடனடி நடவடிக்கையாக தலைமை காவலர் ரோஜாப்பூவை அவர் நேற்று அதிவிரைவு படைக்கு (A.R.FORCE) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நம் அலுவலகத்தின் தலைமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இவரைப்பற்றிய புகாரரை எழுத்துபூர்வமாக கொடுக்கச் சொல்ல இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றோம் அவர் சிகிச்சையில் தனிமைப்படுத்தி இருப்பதால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.
நாம் அளித்த புகார்..
ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தோம் புகாரை பெற்றுக் கொண்டு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கார்த்திகேயனுக்கு புகாரை அனுப்பி உள்ளார். இந்நிலையில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருப்பினும் இதுபோன்ற செயல்களை செய்வதற்கு ஒரு காவல் துறையில் இருக்கும் நபருக்கு எப்படி தைரியம் வந்தது இது தவறான செயல் என்று அவருக்கு தெரியாதா அப்படித் தெரிந்திருந்தும் தெரியாமல் செய்து விட்டோம் தவறுக்கு வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட நாம் இச்செய்தியை மட்டுமல்லாமல் புகார் அளிக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும் ஆனால் அந்த காவல் தலைமை காவலர் ரோஜாப்பூ தன்னுடைய பலத்தை காட்ட வேண்டும் என்று இதுபோன்று செய்வது முறையாக இருக்காது என்பதை இச்செய்தி மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் .மேலும் அவர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம்.
-கார்த்திக்..
+ There are no comments
Add yours