சத்தியமங்கலம் அருகே காராச்சிகோரை வனப்பகுதியில் பெண் யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்துக்கு உட்பட்ட கார்ச்சிகோரை வனப்பகுதியில் நேற்று யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பவானிசாகர் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வனச்சரகர் சிவகுமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.
அப்போது, பெண் யானை ஒன்று வாயில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமாக உயிரிழந்து கிடந்தது. இதனை அடுத்து, யானையை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக வனத்துறை கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னரே யானை உடல்நல குறைவினால் யானை உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours