சேலம்:
குடியரசு தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினம் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது.அதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன ஆனால் தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்தி பங்கேற்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.இதனையடுத்து அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் வளம் வரும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி இன்று சேலம் வந்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை, சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு கவிதா வரவேற்று பார்வையிட்டார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அலங்கார ஊர்தியை வரவேற்கும் விதமாக, தாரை தப்பட்டை அடித்து கரகாட்டம் என பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் பொங்க உற்சாகமாக தமிழக ஊர்தியை வரவேற்றனர்.அதன் பின்பு வாகனம் திருச்சியை நோக்கி புறப்பட்டது.
+ There are no comments
Add yours