சேலம்:
தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவ,மாணவியர் மகிழ்ச்சி பொங்க
ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்…
சேலம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள வைஸ்யா கல்லூரியில் 1994-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை (B.Com) C பயின்ற மாணவ-மாணவிகள் 25 வருடங்களுக்கு பிறகு ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதற்கான நிகழ்ச்சியினை 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் தங்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.மேலும் கல்லூரி ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் சுவாரசியமான நிகழ்வுகளையும் படிக்கின்ற காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பேசினர்.
அதனை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கை தட்டி கேட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு மாணவர்களும் தங்களது குடும்பத்துடன் ஆசிரியர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் ஆசிரியரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி மாணவ,மாணவியரின் சந்திப்பு பெரும் மகிழ்ச்சியையும், சோகத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours