சேலம்:
திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகம்…. கூடுதல் காவல் துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்பு….
சேலம் மாநகர பகுதிகளில் அதிக அளவில் திருநங்கைகள் உள்ளனர். இவர்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து பணம் பறிப்பதாகவும், பல்வேறு இன்னல்களை பொதுமக்களுக்கு தருவதாகவும் காவல்துறையில் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில்.
சேலம் மாநகர காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான சிறப்பு முகாம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் கூடுதல் காவல் துணை ஆணையர் கும்மராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் திருநங்கைகள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது அதனை பயன்பெற்று சமுதாயத்தில் தனக்கென தனி ஒரு பாதையை வகுத்து, அனைத்து மக்களைப் போல தலைநிமிர்ந்து வாழ வேண்டும் மேலும் காவல்துறையினரை கண்டால் ஓடுவதும்,
பொதுமக்களிடம் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தங்களுக்கான உள்ள சட்ட பாதுகாப்பு குறித்து தெரிந்து கொண்டு அதனை பின்பற்ற வேண்டும் என்றார். மேலும் காவல் துறை சார்பில் திருநங்கைகளுக்கு உதவிகள் செய்யப்படும் என்றார், இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் திரளான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
+ There are no comments
Add yours