கொரோனா பரவல் எதிரொலி!! ஆற்றுத்திருவிழா கொண்டாட தடை.!

Estimated read time 1 min read

விழுப்புரம்:

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து இடங்களிலும் ஆற்றுத்திருவிழா கொண்டாட தடை விதிக்கப்படுவதாகவும், மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று மற்றும் ஓமிக்ரான் உருமாறி கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி தடை விதிக்க்கப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளான  விழுப்புரம் வட்டத்திற்கு உட்பட்ட பிடாகம், குச்சிபாளையம், கண்டாச்சிபுரம், வட்டத்திற்கு உட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி, திருவெண்ணைநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் இன்று நடைபெற உள்ள ஆற்றுத்திருவிழாக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

 

இந்த அறிவிப்பை தொடர்ந்து யாரும் ஆற்றுத்திருவிழாவுக்கு வரவேண்டாம் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இத்தடை உத்தரவை மீறி பொதுமக்கள் யாரேனும் ஆற்றுத்தி திருவிழாவுக்கு வந்தால் சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours