பாஜகவுக்கு அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான இடங்களையே அதிமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் நேர்காணல் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 230 பேர் விருப்ப மனுவை கொடுத்துள்ளனர்.
விருப்ப மனு அளித்த பாஜகவினரிடம் நேர்காணல் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நேர்காணல் நடத்தினார்..
+ There are no comments
Add yours