புதுடில்லி:
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே முடிவு செய்யலாம் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் அடுத்த மாதம் 14ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ், பா.ஜ., ஆம் ஆத்மி, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
|
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே முடிவு செய்யலாம். தாங்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் 70748 70748 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours