சேலம்:
மேட்டூர் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி…வீட்டை பூட்டி விட்டு தலைமறைவானதால் பரபரப்பு …
சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி நகரை சேர்ந்தவர் தனபால்சுப்பிரமணியம்.மேட்டூர் பகுதியில் பல நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி மாதந்தோறும் பணம் பெற்று வந்துள்ளார் தனபாலசுப்ரமணியம்.
தனபால் சீட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை சீட்டு நடத்தி வருவதாக கூறி அறிவித்து மாதத் தவணையும், வாரத் தவணையும், மற்றும் தினசரி தவணையும் பணத்தை வசூலித்து வந்துள்ளார், தனபாலை நம்பி 100க்கும் மேற்பட்டோர் ஏலச் சீட்டில் சேர்ந்தனர்.நேரடியாகவும் ஆட்கள் மூலமாகவும் பணத்தை வசூலித்து உள்ளார்.
சீட்டு முடிந்த பிறகு பல மாதங்களாக சீட்டு பணத்தை கொடுக்காமல் மாதந்தோறும் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.பணத்தை கேட்டவர்களிடம் என்னிடம் அனைத்து காவல்துறையினரின் அறிமுகம் உள்ளது.என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று பணம் கேட்டவர்களை மிரட்டியுள்ளதாக கூறப்படிகிறது.
இதனை அடுத்து பணத்தை இழந்தவர்கள் குடும்பத்தோடு பாலசுப்ரமணியம்திடம் வந்து கேட்கலாம் என்று வரும்பொழுது அவர் வீடு பூட்டி இருந்தது.தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர் குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது.இதையடுத்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+ There are no comments
Add yours