என் வெற்றியைப் பார்க்க என் கணவர் என் கூட இல்லைங்கிற வருத்தம் தான் எனக்கு அதிகமா இருந்துச்சு. அவரைத்தான் ரொம்ப மிஸ் பண்ணேன். அவரும் நானும் டிராமாவில் தான் சந்திச்சோம். காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டோம். நான் அவருடைய டிராமாவில் நடிச்சுக்கிட்டு இருந்தேன். குழந்தை பிறந்த பிறகு தான் டிராமாவில் நடிக்கிறதை விட்டுட்டேன். டப்பிங் பேசும்போது எவ்ளோ நேரம் ஆனாலும் பொறுமையா எனக்காக வெயிட் பண்ணி என்னைக் கூட்டிட்டு போவார். என்னுடைய பயணத்தில் அவர் தான் முக்கால்வாசி இருந்திருக்கார். என் பையன், மருமகள், பேரன் எல்லாரும் வேலைக்காக வெளிநாட்டுல இருக்காங்க. விருது வாங்குறப்ப அதைப் பார்க்க கண்டிப்பா வரணும்னு என் பையன் வந்து என் கூடவே இருந்தான். அவனுக்கும் ரொம்ப சந்தோஷம்!” என்றவர் தொடர்ந்து பேசினார்.
“50 வயதான ஒருத்தங்களுக்கு `ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்துல முதன்முதலா டப்பிங் பேசினேன். அப்ப எனக்கு வயசு 18. ஆரம்பத்தில் டப்பிங்னா என்னன்னு கூடத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்து அதுல கத்துக்கிட்டதுதான். இப்ப மாதிரி தனித்தனியா பேசுற மாதிரி ஈசியாலாம் அப்ப டப்பிங் இருக்காது. 4,5 பேர் ஒரே மைக்ல இருப்போம். அதுல யாராச்சும் ஒருத்தர் தப்பு பண்ணினாலும் மறுபடி எல்லாரும் முதலில் இருந்து பேசணும். அப்படித்தான் டப்பிங் சார்ந்த விஷயங்கள் எல்லாம் கத்துக்கிட்டேன்!” என்றதும் `சிறகடிக்க ஆசை’ தொடர் குறித்துக் கேட்டோம்.
+ There are no comments
Add yours