HBD Christopher Nolan: ஹாலிவுட்டின் மாய வித்தகன் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் குறித்த 15 தகவல்கள்! | Lesser known facts about Director Christopher Nolan

Estimated read time 1 min read

5. 2019-ம் ஆண்டில்தான் கருந்துளையின் (Black hole) முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. ஆனால் நோலன் 2014-ல் வெளியான தன்னுடைய ‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்திலேயே கருந்துளையைக் காட்சிப்படுத்தியிருப்பார்.

6. கிப் த்ரோன் என்னும் ஈர்ப்பு இயற்பியல் மற்றும் வானியற்பியல் அறிவியலாளர் நோலனுக்கு இன்டர்ஸ்டெல்லார் படத்தில் உதவியிருப்பார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இத்துறைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார்.

7. ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் எடுத்த ‘கஜினி’ உண்மையில் நோலனின் ‘மெமன்ட்டோ’ படத்தின் கூறுகளைக் கொண்ட தழுவலாகும்.

8. நோலன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளார். இங்கிலாந்தில் அவருக்கு உயரிய ‘சர்’ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

9. நோலன்தான் ‘பேட்மேன்’ படத்தை இயக்கிய முதல் அமெரிக்கர் அல்லாத இயக்குநர்.

கிறிஸ்டோபர் நோலன் தன் 'டன்கிரிக்'

கிறிஸ்டோபர் நோலன் தன் ‘டன்கிரிக்’

10. நோலன் திரைப்படம் எடுப்பதற்கு எந்த ஒரு இன்ஸ்டிடியூட்க்கும் சென்று கற்றதில்லை.

11. சர் மைக்கேல் கெய்ன் கிறிஸ்டோபர் நோலன் உடன் 8 படங்களில் பணியாற்றியுள்ளார். முக்கியமாக ‘பேட்மேன் டிரைலாஜி’யில் இவர் ஏற்ற ஆல்ஃப்ரட் கதாபாத்திரம் உலக பேமஸ்!

12.’இன்டர்ஸ்டெல்லார்’ படத்திற்காக சுமார் 500 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளனர். அதையே அறுவடை செய்து தயாரிப்பு செலவையும் சமம் செய்தவர்.

13. ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தில்தான் முதன்முதலில் ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை காட்சிகள் இடம்பெற்றன.

14. நோலன் பெரும்பாலும் டிஜிட்டல் கேமராக்களை பயன்படுத்துவதே இல்லை. அதற்குப் பதிலாக செல்லூலாய்டு ஐமேக்ஸ் கேமராவையே பயன்படுத்துகிறார்.

15. பெரும்பாலும் VFX பயன்படுத்தாமலே எடுக்கும் நோலன் ‘டெனட்; படத்தில் வரும் விமானம் விபத்து காட்சிக்கும் உண்மையான விமானத்தையே பயன்படுத்தியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours