அதுக்கப்புறம் செலக்ட் ஆனேன். காரைக்குடியில் ஷூட் நடந்துச்சு. ரூமுக்குள்ள அவங்க முன்னாடி சுலபமா நடிச்சிட்டேன். கேமரா முன்னாடி நடிக்க வரல. ரொம்ப பதற்றமாகிடுச்சு. சார் பயங்கரமா திட்டிட்டாரு. அவர்கிட்ட திட்டு வாங்கினதுக்கு அப்புறமாகத்தான் சீரியஸாக நடிக்கவே ஆரம்பிச்சேன். `நாதஸ்வரம்’ சீரியலில் காஜா தைக்கிற பையன் கேரக்டர்னால பெயர் அப்படியே காஜானு ஆகிடுச்சு. அந்தத் தொடருக்கு ஏகப்பட்ட இடத்துல இருந்து பாராட்டு வந்துச்சு. அதைத் தொடர்ந்து திருமுருகன் சாருடைய எல்லா புராஜக்ட்லேயும் இருந்தேன்!” என்றதும் “இந்த வருடம் வர இருக்கிற அவருடைய சீரியலில் நடிக்குறீங்களா?” எனக் கேட்டோம்.
“ஆடிஷன் கொடுத்துட்டு வந்திருக்கேன். கிடைக்குமான்னு தெரியல… கிடைச்சா நல்லா இருக்கும். கொரோனாவுக்கு அப்புறம் எல்லாரும் மறந்துட்டாங்க. ஊர் பக்கம் ஏன் சீரியலுக்கு போகலைன்னு கேட்பாங்க. அப்படிக் கேட்குறப்ப கஷ்டமா இருக்கும். கொஞ்ச நாள் வேலை இல்லாம இருந்தேன். இதுவரைக்குமே திருமுருகன் சார்தான் என்னை பார்த்துக்கிறார். வீட்டு வாடகை மூணு மாசம் கொடுக்க முடியல. அவர்தான் வாடகை கொடுத்தார். அம்மா இதய நோயாளி. அவங்களுக்கான சர்ஜரிக்கு சார்தான் ஒன்றரை லட்சம் கொடுத்து உதவினாரு!” என சோகத்தையும் புன்னகையுடன் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார் ஃபெரோஸ்.
‘காஜா’ ஃபெரோஸின் முழுப் பேட்டியைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours