தயாரிப்பாளர் போனி கபூர், தனது மகள் ஜான்வி கபூருடன் வந்து திருமணத்தில் கலந்துகொண்டிருந்தார். மணிரத்னம், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், நெல்சன், அனிருத் ஆகியோர் இத்திருமணத்தில் கலந்துகொண்டது ஒரு நல்ல மீட் அப்பாக அமைந்துவிட்டது.
நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீட்டுத் திருமணம் போல குடும்படுத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்து, மணமக்களை வாழ்த்தினார்கள். இதுதவிர மோகன் லால், விஜய்யின் மனைவி சங்கீதா, கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் திருமணமான ரகுல் பிரீத்தி சிங் உள்ளிட்ட பலரும் இத்திருமணத்தில் கலந்துகொண்டிருந்தனர். அக்கா திருமணம் என்பதால் நடிகை அதிதி ஷங்கர், வந்திருந்த முக்கிய விருந்தினர்களை வாசல் வரைச் சென்று வரவேற்று, உபசரித்திருக்கிறார்.
வாழ்த்துகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன்!
+ There are no comments
Add yours