ரஜினிகாந்த் பற்றி கிண்டல் சிரிப்பு : பா.ரஞ்சித் மீது ரசிகர்கள் கோபம்
13 ஏப், 2024 – 10:31 IST
ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி, காலா’ படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அதற்கு முன்பு அவர் இயக்கிய ‘அட்டகத்தி, மெட்ராஸ்’ ஆகிய படங்கள் பேசப்பட்டாலும் ரஜினியை இயக்கிய பிறகே அவர் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். ‘கபாலி’ படமாவது பேசப்பட்டது, ஆனால், ‘காலா’ படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித்திடம், “தலித் அரசியலை ரஜினிகாந்த்தை வைத்து பேசியுள்ளீர்கள், அது அவருக்குப் புரிந்ததா இல்லையா என எனக்குத் தெரியவில்லை,” என மலையாள இயக்குனர் பிஜு கேட்க, அதற்கு ரஞ்சித் கிண்டலாக சிரித்துள்ளார். நிகழ்ச்சி அரங்கில் இருந்தவர்களும் அதற்கு கைதட்டி சிரித்தார்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரஜினி ரசிகர்கள் பா.ரஞ்சித்தைத் திட்டித் தீர்த்து வருகிறார்கள். ‘காலா, கபாலி’ ஆகிய இரண்டு படங்கள் மூலம் ரஞ்சித்தை மூலை முடுக்குகளில் எல்லாம் தெரிய வைத்தவர் ரஜினிகாந்த். அந்த இரண்டு படங்கள் மூலம்தான் பா.ரஞ்சித் முன்னணி இயக்குனர்களில் பட்டியலில் இடம் பெற்றார். இப்படியிருக்க ரஜினியைப் பற்றி இப்படி கிண்டலாக சிரிக்கலாமா என பல ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆவேசப்பட்டு வருகிறார்கள்.
நேற்று ‘நன்றி கெட்ட ரஞ்சித்” என்ற ஹேஷ்டேக்கையும் எக்ஸ் தளத்தில் ரஜினி ரசிகர்கள் டிரெண்ட் செய்தார்கள்.
+ There are no comments
Add yours