Cannes Film Festival: 30 ஆண்டுகளுக்குப் பிறகு கான் திரைப்பட விழாவில் ஓர் இந்தியத் திரைப்படம்! | An Indian movie at 77th Cannes Film Festival

Estimated read time 1 min read

இந்தத் திரைப்படம்தான் இயக்குநர் பாயல் கபாடியா இயக்கும் முதல் முழு நீளத் திரைப்படம். கடந்த வியாழக்கிழமை கான் திரைப்பட விழா குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு நடந்திருக்கிறது. இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் கான் திரைப்பட விழாவின் தலைவர் ஐரிஸ் நோபிலாக், திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியலில் பாயல் கபடியாவின் படமும் போட்டியில் இடம் பிடித்திருக்கிறது. இத்திரைப்படம் கேரளாவிலிருந்து மும்பை நர்ஸிங் ஹோமிற்குச் செல்லும் இரண்டு செவிலியர்களை மையப்படுத்தியது.

இத்திரைப்படத்தை இந்தியா மற்றும் பிரெஞ்சு நாட்டின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இயக்குநர் பாயல் கபாடியாவுக்கு கான் திரைப்பட விழாவில் கிடைக்கும் அங்கீகாரம் புதிதான ஒன்றல்ல. இதற்கு முன்பே 2021-ல் இவரின் ‘எ நைட் அஃப் நோயிங் நத்திங்’ (A Night of Knowing Nothing) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டுச் சிறந்த ஆவணப்படத்திற்கான ‘L’OEil d’Or’ விருதைத் தட்டிச் சென்றது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours