`ஆம் காதலன் இவர்தான்!’ உறுதிப்படுத்திய நடிகை ஜான்வி கபூர் |Actress Sridevi’s daughter Jhanvi Kapoor confirmed her relationship with sihar bagariya

Estimated read time 1 min read

அவர் வழக்கமாக எங்கு சென்றாலும் சிகர் பஹாரியாவுடன் செல்வதுதான் வழக்கம். சிகர் பஹாரியா மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயின் பேரன். இருவரும் மும்பையில் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இருவரும் காதலிப்பதாக பாலிவுட்டில் நீண்ட நாள்களாகப் பேச்சு அடிபட்டு வருகிறது. ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் கூட அதனை சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் ஜான்வி கபூர் அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்துவருகிறார். நேற்று போனி கபூர் தயாரிப்பில் வெளியான `மைதான்’ படத்தின் சிறப்புக் காட்சியைக் காண ஜான்வி கபூர் தன் தந்தை போனி கபூர் மற்றும் சகோதரர் அர்ஜுன் கபூருடன் வந்திருந்தார்.

சிகர் பஹாரியாவுடன் ஜான்வி கபூர்

சிகர் பஹாரியாவுடன் ஜான்வி கபூர்

அப்போது ஜான்வி கபூர் அணிந்திருந்த நெக்லஸ் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. நெக்லஸில் “சிக்கு’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. தன் நண்பர் சிகரைத்தான் சிக்கு என்று தனது நெக்லஸில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டதற்கு முதல் முறையாக ஜான்வி கபூர் சிகர் பஹாரியாவுடனான காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தயாரிப்பாளர் கரண் ஜோகரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது உங்களது மொபைலில் ஸ்பீடு டயலில் இருக்கும் 3 பேரின் பெயரைக் கூறும்படி கேட்டதற்கு,”அப்பா, குஷு(குஷிகபூர்), சிக்கு(சிகர்)” என்று தெரிவித்திருந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours