Thalapathy 69 Update : கோலிவுட் திரையுலகில், தற்போது டாப் நடிகராக இருப்பவர், விஜய். வெகு விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கும் இவர், கடைசியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிவும் வெளியாகவில்லை என்றாலும், இது குறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
தளபதி 69:
நடிகர் விஜய், முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்து அவர் இயக்கும் GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான் புல் ஆகிய இடங்களில் நடைப்பெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைப்பெற்றது. தற்போது, இந்த படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது.
தளபதி 69 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தான் கடைசியாக ஒரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் இறங்க உள்ளதாக தெரவித்தார். இவர் கடைசியாக நடிக்க உள்ள அந்த படம்தான், ‘தளபதி 69’. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அதில் நடிக்க இருக்கும் நாயகிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 நாயகிகள்..?
தளபதி 69 படத்தில் நடிக்க மூன்று கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர், நடிகை த்ரிஷா. ஏற்கனவே விஜய்யுடன் பல படங்களில் சேர்ந்து நடித்த இவர், சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, GOAT படத்திலும் ஒரு பாடலுக்கு அவர் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இவரை, தளபதி 69 படத்திலும் விஜய்க்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். அதே போல, விஜய்யுடன் தெறி மற்றும் கத்தி ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த சமந்தாவிடமும் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். இவர்கள் இல்லாமல் மூன்றாவதாக ஒரு புது கதாநாயகியும் லிஸ்டில் இருக்கிறார்.
யார் அந்த நாயகி?
தற்போது தென்னிந்திய அளவில் பெரிய மார்கெட்டை பிடித்திருப்பவர், மிருணாள் தாகூர். இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ படம் மூலம் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்து விட்டார். அந்த படம் மட்டுமன்றி சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘ஹை நன்னா’ படமும் ஹிட் அடித்தது. இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மிருணாள் தாகூர் காட்டில் பட மழை பெய்து வருகிறது. இதனால், இவரையும் தளபதி 69 படத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
சினிமாவை விட்டு விலகும் விஜய்!
நடிகர் விஜய், திரையுலகில் டாப்பில் இருக்கும் காலத்திலேயே சினிமாவை விட்டு விலகுகிறேன் என கூறுயிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 2026ஆம் தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக கூறியிருக்கும் விஜய், அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியிருக்கிறார். ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கியதில் இருந்து, சமூகத்தில் எந்த பெரிய பிரச்சனைகள் நடந்தாலும் அதற்காக குரல் கொடுத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours