“லோன்லதான் மகளுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்! ஆனாலும்…” – நடிகர் கொட்டாச்சி பேட்டி | Comedy Actor Kottachi talks about buying a new car for his daughter

Estimated read time 1 min read

Kia Sonet கார்ல அந்த வசதிகள் இருக்குன்னு தெரிஞ்சதும் 13 லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொடுத்தேன். எங்களோட வசதிக்கும் மீறி லோன் வாங்கித்தான் இந்த காரை வாங்கமுடிஞ்சது. ஆனா, என் பொண்ணோட சந்தோஷம் முக்கியம். எவ்ளோ லட்சமா இருந்தாலும் என் மகளுக்காக நான் வாங்குவேன். அவளை சந்தோஷப்படுத்துவேன். கஷ்டம்… கஷ்டம்னு நினைச்சுக்கிட்டே இருந்தா கஷ்டம் மட்டும்தான் ஜெயிக்கும். நாம வாழ்ற நாள்களில் சந்தோஷத்தை இழந்துடுவோம்.

மகளுடன் நடிகர் கொட்டாச்சி

மகளுடன் நடிகர் கொட்டாச்சி

தாய் தந்தையை சந்தோஷப்படுத்திப் பார்க்க அவங்க உயிரோட இல்ல. தாய், தந்தையா என் மகள் இருக்கா. அவளோட ஆசைகளை நிறைவேற்றி அவளை சந்தோஷப்படுத்தும்போது அப்பா, அம்மாவையே சந்தோஷப்படுத்துற மாதிரி ஃபீல் வருது. கார் வாங்கினதும் மாங்காடு அம்மன் கோயிலுக்கு காரை எடுத்துட்டுப் போயி பூஜை போட்டு சாமி கும்பிட்டுட்டு வந்தோம். கார் வாங்கினா வந்து பூஜை போடுவேன்னு ஈரோடு மாசாணியம்மன் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன். அடுத்ததா, அங்கதான் போகப்போறோம்!” என்கிறார் நெகிழ்ச்சியோடு.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours