அவர் தனது பேட்டியில்,”‘ஸ்ரீதேவி என்னைவிட ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரால்தான் நான் ஆன்மிகத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். அடிக்கடி திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது அதே நடைமுறையை அவரின் மகள் ஜான்வி பின்பற்றி வருகிறார். ஸ்ரீதேவி வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரங்களை ஏற்கக்கூடியவர். அதோடு வழக்கத்துக்கு மாறான செயல்களையும் செய்வார்.
அவரது தாயார் இறந்த போது அவரது தாயாரின் சிதைக்கு ஸ்ரீதேவிதான் தீமூட்டினார்” என்றார். மைதான் படம் இந்திய கால்பந்து விளையாட்டின் தந்தையாக கருதப்படும் செய்யத் அப்துல் ரஹீம் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை பிரியாமணி உட்பட பலர் நடித்துள்ளனர். மைதான் படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டு இருந்த செட் 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பிரிக்கப்பட்டது. அதன் பிறகு புயல் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் மீண்டும் இதே படத்தின் செட் சேதம் அடைந்தது. மிகவும் போராடி இப்படத்தை போனி கபூர் முடித்திருப்பதாகத் தெரிவித்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
+ There are no comments
Add yours