Latest News Actor Daniel Balaji Is Not Married Reason Behind It : கோலிவுட் திரையுலகில் பயங்கரமான வில்லன் நடிகர்களுள் ஒருவராக இருந்தவர், டேனியல் பாலாஜி. இவர், படத்தில்தான் வில்லனாக இருந்தாரே தவிர, இயல்பு வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த மனிதராக இருந்துள்ளார். இவர் குறித்த தகவல்களும், இவர் கொடுத்துள்ள நேர்காணல்களும் தற்போது வைரலாகி வருவகிறது.
திறமையான கலைஞன்..
மறைந்த நடிகர் முரளியின் உறவினர் முறை தம்பி (Cousin) நடிகர் டேனியல் பாலாஜி, முதலில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சீரியல்களில்தான் நடித்து வந்தார். சித்தி, அலைகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்த அவர், தொடர்ந்து சினிமாவிற்குள்ளும் நுழைந்தார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து காவல் அதிகாரியாக நடித்த இவர் அடுத்து கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கொடூரமான சைக்கோ வில்லனாக நடித்தார். இதில், அவரது பெயர் அமுதன். இந்த கதாப்பாத்திரம் பல வருடங்களுக்கு தமிழ் திரையுலகில் பேசப்பட்டது. அடுத்து, வெற்றிமாறனுடன் கைக்கோர்த்து ‘பொல்லாதவன்’ படத்திலும் தனுஷிற்கு வில்லனாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றதோடு மட்டுமன்றி டேனியல் பாலாஜியின் கதாப்பாத்திரமும் பெரிதாக பேசப்பட்டது. 2018ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ படத்தில் இவர் பேசும் ‘லைஃப்ப தொலச்சிட்டியேடா..’ என்ற டைலாக் பின்னர் மீம் மெட்டீரியலாகவே மாறியது.
இப்படி, அழுத்தமான பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், சில வருடங்கள் தமிழ் திரையுலகில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு மலையாளம் உள்பட பிறமொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கும் இவருக்கு எக்கச்சக்க வரவேற்பு. இந்த நிலையில்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ந்து போயினர்.
மாரடைப்பால் உயிரிழப்பு..
நடிகர் டேனியல் பாலாஜி, மார்ச் 29ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு வயது, 48. இந்த நிலையில்தான், இவர் கொடுத்துள்ள நேர்காணல்களும் இவர் குறித்த செய்திகளும் வைரலானது. இதன் மூலம் ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதை தெரிந்து கொண்டனர்.
திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம்..
மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்ததால் டேனியல் பாலாஜி திருமணம் செய்து கொள்ளவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருப்பவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும், அவர் டேனியல் பாலாஜி கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு திருமணம் மீதெல்லாம் பெரிதாக நாட்டம் ஏற்பட்டதில்லை என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க | Daniel Balaji : இறந்த பின்பும் டேனியல் பாலாஜி செய்த நல்ல காரியம்..! என்ன தெரியுமா?
காேயில் கட்டியுள்ளார்…
டேனியல் பாலாஜியை பயங்கர வில்லனாக மட்டுமே ஸ்கிரீனில் பார்ப்பவர்களுக்கு அவர் இயல்பு வாழ்வில் எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர், ஆவடியில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அது மட்டுமன்றி, தன் கையாலேயே செய்த ஒரு சிற்பத்தை அந்த கோயிலிலும் வைத்திருக்கிறார்.
திரையுலகினர் அஞ்சலி…
நடிகர் டேனியல் பாலாஜியின் இறப்பிற்கு சில திரை பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றி மாறன் மற்றும் நடிகர்கள் அதர்வா, விஜய் சேதுபதி, கிஷோர் உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கமல் ஹாசன், சூர்யா, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் டேனியல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், தங்களது பக்கங்களில் பதிவினை வெளியிட்டிருந்தனர். டேனியில் பாலாஜியின் இறப்பு, தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours