பிரபல காமெடி நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷூ காலமானார்!

Estimated read time 1 min read

‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சேஷூ. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளித்திரை மூலம் மக்களை என்டர்டெயின் செய்து வந்தார். `பாரிஸ் ஜெயராஜ்’, `டிக்கிலோனா’, `குலு குலு’ எனத் தொடர்ந்து சந்தானம் படங்களில் கவனம் ஈர்த்தவர், கடைசியாக `வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படத்திலும் அவருடைய நடிப்பினால் பலரையும் சிரிக்க வைத்தவர், இன்று உடல்நிலை குறைவு காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார்.

சமீபத்தில் சேஷூ மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. அவரது உடல்நிலை ஒத்துழைக்காமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பிரைன் டெட் ஆன நிலையில் அவரை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று மதியம் சேஷூ இயற்கை எய்தியிருக்கிறார். நாளை காலை 8 மணிக்கு சென்னையில் அவருடைய இறுதிச் சடங்கு நடக்கவிருக்கிறது.

‘லொள்ளு சபா’ சேஷூ

பலருக்கும் உதவும் குணம் கொண்டவர் சேஷூ. பல குடும்பங்களுக்கு அவரால் இயன்ற உதவியைச் செய்திருக்கிறார். பலருக்கும் திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, வடக்குப்பட்டி ராமசாமி இயக்குநர் கார்த்திக் யோகி மற்றும் பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours