Ilaiyaraaja Biopic Movie What Happens If Simbu Madhavan Vishal Play As Real Celebrities With Dhanush

Estimated read time 1 min read

Ilaiyaraaja Biopic : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தற்போது சைன் செய்துள்ள படம், இளையராஜாவின் பையோபிக். இதனை அருண் மாத்தேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல் பாேஸ்டர் நேற்று வெளியானதை ஒட்டி, இது குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இளையராஜாவின் பையோபிக்..

கிட்டத்தட்ட, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய திரையுலகின் இசை ஜாம்பவானாக திகழ்பவர், இசைஞானி இளையராஜா. பிறரால் எளிதில் சாதிக்க முடியாத, தொட முடியாத உயரத்தை தொட்ட இவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் தற்போது அவரது வாழ்க்கை வரலாற்று படம் ஒன்று தயாராக இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டரை நேற்று நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது தனது கணவு என பேசிய நடிகர் தனுஷ், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். 

ஏற்கனவே தனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாத்தேஸ்வரன், இந்த படத்தையும் இயக்க இருக்கிறார். இளையராஜாவாக நடிக்க நடிகர் தனுஷ் பிரத்யேகமாக சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இவர்கள் எல்லாம் நடித்தால் எப்படியிருக்கும்..

இளையராஜாவின் கதையில், கண்டிப்பாக நிஜ உலக கதாப்பாத்திரங்களும் இருக்கத்தான் போகிறது. அப்படி, அந்த கதாப்பாத்திரங்களுக்கு எந்தெந்த நடிகர்கள் சரியாக இருப்பார்கள் என்பதை வைத்து நெட்டிசன்கள் சில மீம்களை உருவாக்கியிருக்கின்றனர். 

Dhanush And Simbu

ஏ.ஆர்.ரஹ்மானாக சிம்பு..

தமிழ் திரையுலகில் சில போட்டி நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குள் ஒத்து போகது என்று ரசிகர்கள் நினைப்பதுண்டு. அப்படி, அவர்கள் ஒத்து பாேகாது என நினைக்கும் நடிகர்கள் தனுஷ்-சிம்பு. அதே போல ஏ.ஆர்.ரஹ்மானை இளையராஜாவிற்கு பிடிக்காது என்றும் கூறப்படுகிறது. இதை வைத்து, நெட்டிசன்கள் சிலர் குசும்பு செய்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானாக சிம்பு இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இடம் பெறுவார் என்று அந்த மீமில் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | Ajith Kumar : வாழத்தெரிந்த மனிதர் அஜித்! சமையலும் செய்வார்..பைக் டூரும் செல்வார்..வைரல் போட்டோக்கள்!

வைரமுத்துவாக விஷால்..

நடிகர் விஷால், வைரமுத்துவை போலவே உயரமாகவும் அவரது நிறமுடையவராகவும் இருப்பதால் இளையராஜாவின் கதையில் அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். AI கொண்டு இருவரின் முகத்தையும் மெர்ஜ் செய்து, இந்த மீமை அவர்கள் உருவாக்கியுள்ளனர். 

மணிரதன்மாக மாதவன்..

கோலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் சார்மிங் சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன். இளமை காலத்தில் காதல் கதாநாயகனாக நடித்து வந்த இவர், தற்போது வலிமை வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றில் நடித்து வருகிறார். இளையராஜா மணிரத்னமின் படங்கள் பலவற்றிற்கும் இசையமைத்து இருக்கிறார். எனவே, மாதவன் இவர் ரோலுக்கு கரெக்டாக இருப்பார் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து இருக்கின்றனர்.

இளையராஜாவாக நடிக்க செட் ஆவாரா தனுஷ்?

தென்னிந்திய திரையுலகில் உள்ள திறமை வாய்ந்த நடிகர்களுள் ஒருவர், தனுஷ். கமர்ஷியல் படங்கள் மட்டுமல்ல, வலிமை வாய்ந்த கதாப்பாத்திரங்கள் இருக்கும் எந்த கதையாக இருந்தாலும் அவற்றை ஏற்று நடித்து தான் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து வருகிறார். ஒரு சீரியஸான கதையில் நடிப்பதற்கு முன்னர் அவர் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து மெதட் ஆக்டிங்கும் செய்வதுண்டு. எனவே, இவர் இளையராஜாவின் கதைக்கு சரியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இளையராஜாவாகவே மாறிய தனுஷ்…இணையத்தில் வைரலாகும் AI புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours