இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “இப்போது பேசுபொருளாகியிருக்கும் `மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு…’ பாடல் குணாவுக்கும், அபிராமிக்கும் நடக்கும் காதல் பாட்டு என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அது எனக்கும் இளையராஜவுக்குமான காதல் பாடல். என் கண்மணிக்கு நான் எழுதினேன், அவர் அதுக்கு இசையமைத்தார். நான் இப்போது பிறக்காமல் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்திருந்தாலும் இளையராஜாவின் காலத்தில்தான் இருந்திருப்பேன். அப்போதும் அவர் இசை அக்காலத்தை ஆக்கிரமித்திருக்கும்.
இளையராஜாவின் கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியாது. இப்படத்தை இயக்குவது கஷ்டம்தான். ஆனால், நான் முதன்முறை பாடும்போது இளையராஜா என்னிடம், ‘யாரைப்போலவும் பாட முயற்சிக்க வேண்டாம். அதுவாக வரும் பாடுங்கள்’ என்றார். அதைத்தான் நான் உங்களுக்கும் சொல்கிறேன். இளையராஜா வாழ்க்கையைப் படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவரது வாழ்க்கையை எட்டு பாகங்களுக்கும் மேல் எடுக்கலாம்.
அதனால், அவரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே எடுங்கள். அதைத்தான் இளையராஜாவும் உங்களுக்கு அறிவுரையாகச் சொல்வார். இப்படத்தைப் பார்த்துவிட்டு குறை கூறுபவர்கள் கூறட்டும். ‘இளையராஜா ஆறடி இல்லை, அதைவிடவும் குறைவுதான்’ என்றெல்லாம் கூட குறை சொல்வார்கள். ஆனால், அவரின் பாடலின் ஒரு அடியைக் கேட்டால் குறைகளெல்லாம் தெரியாது.
இளையராஜா பற்றி இசைக் கலைஞர்கள் சொல்லும் கதை, இயக்குநர்கள் சொல்லும் கதை, இசை தெரிந்தவர்கள் சொல்லும் கதை, இசை தெரியாதவர்கள் கதை என ஒவ்வொருவர் கோணத்திலும் பல கதைகள் இருக்கிறது. இது இளையராஜா பற்றிய கதையல்ல, ‘பாரத ரத்னா’ இளையராஜா பற்றிய கதை” என்று பேசியிருக்கிறார்” என்று பேசியுள்ளார்.
+ There are no comments
Add yours