Kanguva Teaser: `சிறப்பு விருந்தினர்!’ கங்குவா டீசரில் இடம்பெறும் விஷயங்கள் என்னென்ன?- பரபர அப்டேட்!

Estimated read time 1 min read

‘சிறுத்தை’ சிவா, சூர்யா இருவரின் திரைப்பயணத்திலும் மைல் கல்லாக இருக்கும் எனச் சொல்லப்படுகிற ‘கங்குவா’ படத்தின் டீசரை பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ மேக்கிங்கில் மிரட்டலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 10 மொழிகளில் 3D தொழில் நுட்பத்தில் இந்தப் படம் வெளிவருவதால், படத்தின் கிராபிக்ஸ் மற்றும் இதர வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் டீசர் குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இதோ!

”கங்குவாவின் தென்னிந்திய மொழிகளுக்கான ஒடிடி உரிமையை அமேஸான் ப்ரைம் நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. (இதன் இந்தி ரைட்ஸ் இன்னமும் கொடுக்கப்படவில்லை.) இந்நிலையில் ப்ரைம் நிறுவனம் இந்தாண்டு தான் வாங்கியிருக்கும் படங்கள் குறித்த நிகழ்ச்சி ஒன்றை மும்பையில் நடத்துகிறது. இந்த அறிமுக விழாவில் பல படங்களின்ட டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியிடப்படுகின்றன என்கிறார்கள். அதில் தான் ‘கங்குவா’வின் மிரட்டலான டீசரும் வெளியாகிறது. இதற்காக அதன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் இயக்குநர் சிவா ஆகியோர் மும்பை சென்றிருக்கின்றனர். இன்று வெளியாகும் டீசரில் ‘கங்குவா’வின் பிரமாண்ட மேக்கிங் மற்றும் ஆச்சரியமூட்டும் காட்சிகள் குறித்த தொகுப்பு இடம்பெறும் எனத் தெரிகிறது.

கங்குவா டீம்

கங்குவா டீம்

சென்னையில் உள்ள ‘Lorvin studios’ தான் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை செய்து வருகிறது. கிராபிக்ஸ் நிபுணர்கள் ஹரிஹரசுதன், செல்வா ஆகிய இருவரின் தலைமையில் ஒரு பெரிய டீமே கிராபிக்ஸை கவனித்துவருகிறார்கள். அவர்களின் டீம் மேற்பார்வையில் டீசரைத் தொகுத்துள்ளனர். படத்தின் பெரும்பகுதியான காட்சிகள் போர்க்களம் நிறைந்த காட்சிகள் என்பதாலும், படத்தில் யானை, முதலை, புலி, கழுகு ஆகிய விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றன என்பதால், படத்தின் பிரமாண்டத்தை இந்த டீசர் உணர்த்தும் என்கிறார்கள். இன்று மும்பையில் நடக்கும் நிகழ்ச்சி, ‘கங்குவா’விற்கு மட்டுமான நிகழ்ச்சி இல்லை என்பதால், படத்தின் நடிகர்கள் யாரும் அதில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிகிறது. ஆனால், ‘கங்குவா’விற்கென சிறப்பு விருந்தினர் ஒருவர் பங்கேற்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours