Latest Cinema News Actor Vijay Kerala Visit Fans Thrashed His Car At Thiruvananthapuram Airport Watch Viral Video Here

Estimated read time 1 min read

Actor Vijay Kerala Visit Latest Cinema News Tamil : சமீபத்தில் அரசியல் கட்சியை தாெடங்கியுள்ள நடிகர் விஜய், தற்போது தான் நடித்து வரும் படப்பிபடிப்பில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்கு சென்றார். அங்கு சென்ற போது, அவரை பல லட்சம் ரசிகர்கள் ஒன்றாக திரண்டு வரவேற்றனர். 

14 வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்..

நடிகர் விஜய், தனது 68வது படமான GOAT (Greatest Of All Time) படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் வெளிநாடுகளில் நடைப்பெற்றது. இதையடுத்து, சென்னையிலும் படப்பிடிப்பு தொடங்கியது. கேரளாவிலும் சில முக்கிய காட்சிகளை எடுக்க உள்ளதால், GOAT படக்குழுவினர் அனைவரும் தற்போது கேரளாவிற்கு சென்றுள்ளனர். நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் கேரளத்தில் படமாக்கப்பட உள்ளன. எனவே, அவர் நேற்று திருவனந்தபுர விமான நிலையத்தில் வந்திறங்கினார். இவரை வரவேற்க பல லட்சம் கேரள ரசிகர்கள் அலைகடலென விமான நிலையத்தில் திரண்டு நின்றனர். நடிகர் விஜய், கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து கேரளா சென்றதால் அவரை காணும் ஆவலில் பல பேர் கூடினர். விஜய்யின் வருகையால் திருவனந்த புரத்தில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. 

கார் அடித்து நொறுக்கப்பட்டது..

நடிகர் விஜய், திருவனந்தபுரத்தில் இருந்து ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு ஒரு காரில் சென்றார். அப்போதும் ரசிகர்கள் அவரது காரை சுற்றி நின்று கொண்டு காரின் கதவு, ஜன்னல், காரின் முன்பக்கம் ஆகிய பகுதிகளில் கை வைத்து தட்டி, விஜய் மீது இருந்த பாசத்தை வெளிப்படுத்தினர். அப்போது விஜய், காருக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. 

இந்த நிலையில், விஜய் காரை விட்டு இறங்கிய பிறகு அந்த காரின் நிலையை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த காரின் பின்பக்கம் மற்றும் கதவுகள் சொட்டையாகும் அளவிற்கு ரசிகர்கள் அதன் மேல் விழுந்து விஜய்யை பார்த்துள்ளனர். காரின் சைட் கண்ணாடி ஆடிக்கொண்டும், முன் பக்க கண்ணாடி உடைந்து சிதைந்தும் போயுள்ளது. அது மட்டுமன்றி, காரின் பல பக்கங்கள் பெண்ட் ஆகியிருக்கிறது. 

பாசத்தை இப்படியா பொழிவது?

விஜய் அமர்ந்திருந்த காரின் நிலையை பார்த்த பல நெட்டிசன்கள், “டேய், பாசத்தை காட்டுவதற்கும் ஒரு அளவில்லையா டா?” என்று கேட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | Vijay: பல வருடங்கள் கழித்து கேரளாவிற்கு சென்ற விஜய்! ஆரவார அலப்பறையுடன் வரவேற்ற ரசிகர்கள்..

முழு நேர அரசியலில் இறங்கிய விஜய்..

நடிகர் விஜய், கடந்த மாதம் தான் முழு நேர அரசியலில் இறங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அவரது அரசியல் கட்சியில் ஆட்களை சேர்ப்பதற்காகவும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தான், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நடிகராக இருந்த போது பெரிதாக சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து குரல் கொடுக்காத அவர், தற்போது அனைத்து பிரச்சனைகளுக்காகவும் தனியாக அறிக்கையை வெளியிட்டு வருகிறார். 

கடைசி படம் எது?

நடிகர் விஜய் GOAT படத்தை அடுத்து, இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் அட்லீயும் இந்த படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள் லிஸ்ட்! யார் குக்-யார் கோமாளி? முழு பட்டியல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours