“முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் ‘குட் நைட்’ திரைப்படத்தில் இணைந்து நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு மனைவியாக அனு கதாபாத்திரத்தில் நடித்த மீதாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன.
‘குட் நைட்’ படத்திற்கு பிறகு, தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வந்தததாகவும் கூறப்பட்டது. இதனிடையே கடந்த நவம்பர் மாதம் மீதா ரகுநாத்திற்கு அவரது சொந்த ஊரான ஊட்டியில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. இரு வீட்டார் முன்னிலையில் நடைபெற்ற இத்திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
+ There are no comments
Add yours