கொச்சி: மோகன்லால் நடிக்கும் 360-வது படத்தை ‘சவுதி வெள்ளக்கா’ பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து மோகன்லால் நடிக்கும் 360வது படத்தை இயக்குகிறார் தருண் மூர்த்தி. ‘ஆப்ரேஷன் ஜாவா’, ‘சவுதி வெள்ளக்கா’ படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் தயாரிக்கிறார். மேலும், மற்ற நடிகர்கள் குறித்தும், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, மோகன்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரோஸ்’ (Barroz) மலையாள படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Looking forward to working with Tharun Moorthy and M Renjith for my 360th film. Directed by Tharun Moorthy, the film is scripted by KR Sunil and the director himself.
The project is produced by M. Renjith under Rejaputhra Visual Media. Appreciating your prayers and well wishes… pic.twitter.com/tuDlPq1HSV
— Mohanlal (@Mohanlal) March 18, 2024